சூரிய வணக்கம் செய்முறை | Suryanamaskar

உண்மையின் பொன்மயமான திரையால் முகம் மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையை காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்.

சூரிய வணக்கம் நம் உடல் முழுவதையும் இயக்குகிறது எலும்பு, தசைகள், மூட்டுகள். நரம்பு மண்டலங்கள் உள் உறுப்புகள் முதலியனவற்றை முழுமையாக சீராக இயக்குகிறது. மேலும் உடல் வளையும் தன்மை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இது ஆசனங்களையும் பிராணாயாமத்தை ஒருங்கிணைத்த ஒரு பயிற்சி. இது பன்னிரெண்டு நிலைகளை வரிசையாகக் கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் மார்புபகுதியின் தசைகள் சுருங்கி விரிய செய்து சுவாசத்தை சீராக இயக்கும். இதை தினமும் செய்வதால் முதுகெலும்பு மற்றும் மூட்டுகள் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மை அடைகிறது. இடுப்பு பகுதி தசைகளை குறைத்து அழகுற செய்கிறது.

ஆரம்ப நிலை
நின்ற நிலையில் வணக்கம்

கால்களை ஒன்றாகச் சேர்த்து நேராக நின்று கைகளை நமஸ்கார முத்திரையில் வைக்கவேண்டும்.

நிலை 1 (பிறை யாசனம்)

மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கைகளைத் தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். இடுப்பைப் பின்புறம் வளைத்துத் தலையை பின்னே கொண்டு வரவேண்டும்.

நிலை 2 (பாதஹஸ்தாசனம்)

முச்சை வெளியே விட்டுக் கொண்டே உடலை முன்னே வளைக்க வேண்டும் நெற்றியினால் கால்முட்டுகளைத் தொடவும் உள்ளங்ககைள் கால்களுக்குப் பக்கவாட்டில் தரையில் இருக்க வேண்டும்.

நிலை 3 (அஸ்வசஞ்சலாசனம்)

மூச்சை உள் இழுத்துக் கொண்டே வல தூ காலை பின்னுக்கு கொண்டு வந்து மூட்டு தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

நிலை 4 (துவிபாத அஸ்வசஞ்சலாசனம்)

முச்சை வெளி விட்டுக் கொண்டே கொண்டு இடது காலையும் பின்னே வர வேண்டும் உடலைத் தரை மட்டுத்திற்கும் 30 டிகிரி அளவில் நேராக வைத்துக் கொண்டு காலகளையும் உள்ளங்ககைகளும் தரையில் பதியும்படி வைக்க வேண்டும்.

நிலை 5 (சசங்காசனம்)

உள்ளிழுத்துக் கொண்டே கால் மூட்டின் பகுதியை மூச்சை மடக்க வேண்டும் மூச்சை வெளியே விட்டுக்கொண்டு தலையை தரையில் பதிக்க வேண்டும் சுவாசம் சாதாரணமாக இருக்க வேண்டும்.

நிலை 6 (சாஸ்டாங்க நமஸ்காரம்)

கைகளையும், கால்களையும் இழுத்துக்கொண்டே மேலே வந்து மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மார்பும், நெற்றியும் தரையில் வைக்க வேண்டும் மூச்சை வெளியே நிறுத்திய நிலையிலே இருக்கவும். இதில் நெற்றி, மார்பு, கைகள், கால்மூட்டுகள். கால் போன்ற எட்டு அங்கங்களும் பதிந்திருக்கும். இதற்கு சாஷ்டாங்க நமஸ்காரம் என்று பெயர்.

நிலை 7 (புஜங்காசனம்)

மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலையை உயர்த்தி முதுகுத் தண்டு குழிந்து இருக்கச் செய்யவும். உடல் நன்றாக வளைந்து மேலே உயர்ந்த நிலையில் இருக்கட்டும். இதில் கை மற்றும் கால் விரல் மட்டும் தரையில் இருக்க வேண்டும். கால்மூட்டு தொடைபகுதி தரையில் படக்கூடாது.

நிலை 8 (பர்பத ஆசனம்)

மூச்சை வெளியே விட்டுக் கொண்டே புட்டங்களை உயர்த்த வேண்டும். தலையை கைகளுக்கு இடையில் கொண்டு வரவேண்டும். குதியங்காலத் தரையில் பதியவேண்டும்.

நிலை 9 (சசங்காசனம்)

5 வது நிலையில் போலச் செய்யவும்.

நிலை 10 (அஸ்வசஞ்சலாசனம்)

மூச்சை இழுத்துக் கொண்டே வலது காலை இரண்டு கைகளுக்கு இடையில் கொண்டு யாவும். மூன்றாம் நிலை போல் வரவும்.

நிலை 11(பாதஹஸ்தாசனம்)

மூச்சை வெளியே விட்டுக் கொண்டே இடது பாதத்தையும் முன்னே கொண்டு வரவும் இரண்டாவது பாதத்தையும் முன்னே கொண்டு வரவும் இரண்டாவது நிலையில் பெததுபோல் நெற்றியினால் கால் மூட்டுகளைத் தொட வேண்டும்.

நிலை 12

மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே ஆரம்ப நிலைக்கு வர வவண்டும்.

பலன்கள்

மூளை சுவாசம், இரத்த ஓட்டம், ஜீரண உறுப்புகளின் நரம்புகளை ஊக்கப் படுத்துகிறது. கண்பார்வைக்கு சிறந்த பயிற்சி. வலிமை, அதிகரிக்கிறது. சுறுசுறுப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *